ed star of the white flag

img

வெண் கொடியின் சிவப்பு நட்சத்திரம்

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள, விவசாய பூமி தான் திருநெல்வேலி தச்ச நல்லூர் அருகில் உள்ள கரையிருப்பு. அங்குள்ள ஆர்.எஸ்.ஏ நகரில் பிறந்தவர் தோழர் அசோக். பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு பேட்டையில் உள்ள மதிதா இந்துக் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்தவர்.